கோவை மாநாகராட்சி மாமன்ற கூட்டத்தில் அதிமுக கவுன்சிலர் பிரபாகரன் சஸ்பெண்ட் செய்யப்பட்ட உத்தரவை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கோவை மாமன்ற கூட்டத்தில் அடுத்த 3 கூட்டங்களுக்கு அதிமுக கவுன்சிலர் பிரபாகரனை சஸ்பெண்ட் செய்து மேயர் உத்தரவிட்டிருந்தார். இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், மாமன்ற கூட்டத்தில் எதிர்த்து கேள்வி எழுப்பியதற்காக சஸ்பெண்ட் செய்வீர்களா என கேள்வி எழுப்பிய நீதிபதி, அந்த உத்தரவை ரத்து செய்தார். மேலும்,கூட்டத்தில் முறையாக நடந்து கொள்ள வேண்டும் என கவுன்சிலர் பிரபாகரனுக்கு அறிவுரையும் வழங்கினார்.