எதிர்க்கட்சி கவுன்சிலர்களின் குரல்வளைகளை நசுக்கும் செயலில் திமுக ஈடுபட்டு வருவதாக அதிமுக கவுன்சிலர் சத்யநாராயணன் குற்றம்சாட்டினார். சென்னை ரிப்பன் மாளிகையில் நடைபெற்ற மாமன்ற கூட்டத்துக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், எதிர்க்கட்சிகள் சொல்லக்கூடிய கருத்துகள் புறக்கணிக்கப்படுவதாகவும், யாரும் காது கொடுத்து கேட்பதில்லை எனவும் குற்றம்சாட்டினார்.