திமுகவை மட்டும் எதிர்த்து அதிமுகவையும், காங்கிரஸையும் புனிதப்படுத்தும் வேலையை தவெக செய்து வருவதாக நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சனம் செய்தார். கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், நீட் தேர்வு, இந்தி திணிப்பு, ஸ்டெர்லைட் ஆலை, கச்சத்தீவு தாரைவார்ப்பு உள்ளிட்டவை காங்கிரஸ் ஆட்சியில் நடந்தது என குற்றம்சாட்டினார். மேலும், பாஜக கொள்கை எதிரி, திமுக அரசியல் எதிரி என கூறும் விஜய், திமுகவின் கொள்கையை ஏற்று, அரசியலை எதிர்க்கிறாரா? அல்லது பாஜகவின் அரசியலை ஏற்று அதன் கொள்கையை எதிர்கிறாரா? என கேள்வி எழுப்பினார்.