தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில், அதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சியை சேர்ந்த 300க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்தனர். கோவில்பட்டி சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் சுரேஷ் முன்னிலையில், அதிமுக நகர பொருளாளர் ஆரோக்கியம் உள்ளிட்ட 200 பேர் அதிமுகவில் இருந்து விலகி தமிழக வெற்றி கழகத்தில் தங்களை இணைத்து கொண்டனர்.