செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தால் வேலைவாய்ப்புகள் அதிகரிக்கவே செய்யும் என அமைச்சர் பிடிஆர்.பழனிவேல் தியாகராஜன் கூறினார். கோவை ஆர்எஸ்.புரம் பகுதியில் தனியார் செயற்கை நுண்ணறிவு சிறப்பு மையத்தை திறந்து வைத்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், AI தொழில்நுட்பத்தால் வேலைவாய்ப்பில் பாதிப்பு ஏற்பட இன்னும் 20 ஆண்டுகளுக்கு மேலாகும் என்றார்.