புதுச்சேரி மாநிலத்தில் விவசாய கடன்கள் அனைத்தும் தீபாவளிக்குள் தள்ளுபடி செய்யப்படும் என முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார். அரசு நிகழ்ச்சி ஒன்றில் பேசிய முதலமைச்சர் ரங்கசாமி, விவசாயத்தை மேம்படுத்த பல்வேறு முயற்சிகள் எடுத்து வருவதாகவும், விவசாயிகள் கடனாக பெற்ற 13 கோடி ரூபாயை தீபாவளிக்குள் தள்ளுபடி செய்ய உள்ளதாகவும் தெரிவித்தார்.