ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே வேளாண்மை மற்றும் உழவர் நலத் துறை சார்பில் நடைபெறும் வேளாண் கண்காட்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். மேலும் 2 நாட்கள் நடைபெறும் வேளாண் கருத்தரங்கையும் தொடங்கி வைத்த அவர், 159 கோடியே 53 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 11 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.