சென்னை மெட்ரோ ரயில் 2-ஆம் கட்ட திட்டத்தில், ஓட்டுநர் இல்லாமல் இயக்கப்படும் ரயில்களை தயாரிப்பதற்கான ஒப்பந்தம் ஆயிரத்து 538 புள்ளி 35 கோடிக்கு வழங்கப்பட்டது. 3 ரயில் பெட்டிகள் கொண்ட 32 மெட்ரோ ரயில்களை தயாரிக்க ஆல்ஸ்டோம் டிரான்ஸ்போர்ட் இந்தியா ((Alstom Transport india )) என்ற நிறுவனத்திற்கு இதற்கான ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது.இந்த ஒப்பந்தத்தின் கீழ், முதல் மெட்ரோ ரயில் 2027 பிப்ரவரியில் மெட்ரோ ரயில் நிறுவனத்திடம் ஒப்படைப்பதாகவும், மீதமுள்ள ரயில்கள் 2027 செப்டம்பர் முதல் 2028 மே வரை ஒவ்வொரு கட்டமாக ஒப்படைப்பதாக கூறப்பட்டுள்ளது.