குன்னூர் வெலிங்டன் ராணுவப் பயிற்சி முகாமில் அக்னிபாத் வீரர்கள் சத்தியப் பிரமாணம் ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த முகாமில், தென் மாநிலங்களை சேர்ந்த ராணுவ வீரர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வரும் நிலையில், அக்னிபாத் திட்டத்தின் கீழ் தேர்வான 551 வீரர்கள் பயிற்சி பெற்று வந்தனர். அவர்களுக்கான 7 மாத பயிற்சி நிறைவடைந்த நிலையில், சத்திய பிரமாணம் ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில், பயிற்சியில் சிறந்து விளங்கிய 11 அக்னிபாத் வீரர்களுக்கு பதக்கம் மற்றும் நினைவுப் பரிசு வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் வீரர்களின் குடும்பத்தினர் கலந்து கொண்டனர்.