மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே மகிமலையாறு மற்றும் வடிகால் உபனாற்றில் 3 கிலோ மீட்டர் தொலைவிற்கு ஆகாயத்தாமரை படர்ந்துள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர். இதனால் மழைக்காலங்களில் தண்ணீர் வடியாமல் 2 ஆயிரம் ஏக்கருக்கு மேலான விளைநிலங்கள் பாதிக்கும் அபாயம் உள்ளதால் அவற்றை உடனடியாக அகற்றி தூர்வாரி தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.