நெல்லை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையிலுள்ள பிரதான அருவிகளான அகஸ்தியர், மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து சீரானதால், சுற்றுலா பயணிகள் குளிக்க மீண்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் அம்பை எம்.எல்.ஏ. இசக்கி சுப்பையா தொடர்ந்த வழக்கில் நீதிமன்றம் உத்தரவிட்டதன் படி, இன்று முதல் அம்பை தாலுகாவை சேர்ந்த உள்ளூர் மக்கள் கட்டணமின்றி அருவியில் குளிக்க அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் சுற்றுலா பயணிகளுடன் இணைந்து உள்ளூர் மக்களும் அருவியில் ஆனந்தமாய் குளித்து வருகின்றனர்.இதையும் படியுங்கள் : பெண்கள் T20 உலகக் கோப்பைக்கான அட்டவணை வெளியீடு..