மயிலாடுதுறையில் பாஜகவினர் ஒட்டியுள்ள அரசியல் போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. உதயநிதிக்கு பிறகு இன்பநிதிக்காகவும் பணிபுரிய வேண்டியிருக்கும் என்பதால் திமுகவில் இருந்து விலகுவதாக சேலம் ஓமலூரை சேர்ந்த திமுக நிர்வாகி எழிலரசன் அறிவித்துள்ளதை மையப்படுத்தி ஒட்டப்பட்டுள்ள அந்த போஸ்டரில், மோடி மற்றும் அண்ணாமலையின் தலைமையேற்க வரவேற்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.