ராணிப்பேட்டையில் விஏஓ அலுவலத்தில் புகுந்து கிராம அலுவலரை கத்தியால் தாக்கி அலுவலகத்தை சேதப்படுத்திய இளைஞரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இன்ஸ்டாகிராமில் கிராம அலுவலரின் தங்கை குறித்து பரத் என்ற இளைஞர் அவதூறாக பதிவிட்ட நிலையில், கோபமடைந்த கிராம அலுவலர் இளைஞரின் தங்கை மற்றும் அண்ணன் மனைவி குறித்து அவதூறாக பதிவிட்டார்.