நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதியில் கொட்டித்தீர்த்த கனமழையின் காரணமாக ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி பெண் இந்தி ஆசிரியர் பரிதாபமாக உயிரிழந்தார். அலாய் சேட் காம்பௌண்ட் பகுதியில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக கனமழை வெளுத்து வாங்கியது. இதனால், திடீரென மண் சரிவு ஏற்பட்டு மழைநீரில் அடித்து செல்லப்பட்ட மண் ரவீந்தரநாத் என்பவருடைய வீட்டிற்குள் புகுந்தது. இதில், ரவீந்தரநாத் உயிர் தப்பிய நிலையில், அவரது மனைவி மண்ணுக்குள் சிக்கி உயிரிழந்தார்.