நெல்லூர்பேட்டை பெரிய ஏரி, 4 ஆண்டுகளுக்குப் பிறகு நிரம்பியதால், மலர் தூவி வரவேற்ற விவசாயிகள் மற்றும் பொது மக்கள் மகிழ்ந்துள்ளனர். வேலூர் மாவட்டம், குடியாத்தம், தமிழக-ஆந்திர எல்லை பகுதியில் பெய்த தொடர் கனமழை காரணமாக மோர்தானா அணை கடந்த சில நாட்களுக்கு முன் நிரம்பி, முழு கொள்ளளவை எட்டியது. இந்நிலையில், மோர்தானா அணையிலிருந்து வெளியேறும் உபரி நீர், கவுண்டயா மகாநதி ஆற்றின் வழியாக குடியாத்தம், நெல்லூர்பேட்டை ஏரிக்கு வந்தது.இந்நிலையில், 400 ஏக்கர் பரப்பளவு கொண்ட நெல்லூர் பேட்டை ஏரி தனது முழு கொள்ளளவை எட்டி நிரம்பியது. நிரம்பி வழிந்த தண்ணீரை மலர் தூவி வரவேற்று விவசாயிகள் மற்றும் பொது மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். சிறுவர்கள் நிரம்பி வழிந்து வரும் தண்ணீரில் குளித்து, விளையாடி மகிழ்ந்து வருகின்றனர்.