தமிழகம் முழுவதும் ஆர்.எஸ்.எஸ். என்ற பெயர் தெரிவதற்கு தாமே காரணம் என விசிக தலைவர் தலைவர் திருமாவளவன் கூறினார். தூத்துக்குடி மாவட்டம், கிளவிபட்டி கிராமத்தில் விசிக வெங்கடேசன் நினைவேந்தல் நிகழ்ச்சியில் பேசியவர் அம்பேத்கர் என்ற அடையாளத்தை சிதைப்பதே ஆர்எஸ்எஸ் உள்ளிட்ட சங்பரிவார்களின் நோக்கம் என்றார். ஆர்எஸ்எஸ் என்ற இயக்கம் எங்கிருந்து வந்தது என்பதை தான் மட்டுமே தெரியப்படுத்தி வருவதாக பேசியவர், மற்ற அரசியல் கட்சியினர் ஆர்எஸ்எஸ் என்று சொல்லி, எதற்கு அவர்களை சீண்ட வேண்டும், நாம் ஏன் வம்பில் மாட்ட வேண்டும் என நினைத்து, பெரும்பாலும் பாஜக என்றே சொல்வதாகவும் திருமாவளவன் கூறினார்.