16 குற்றச்சாட்டுகள் குறித்து வரும் 31ஆம் தேதிக்குள் அன்புமணி விளக்கமளிக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.பாமக நிறுவனர் ராமதாஸ் தரப்பு நடத்திய பொதுக்குழுவின்போது, அன்புமணி மீது முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் குறித்து முடிவெடுக்க, விழுப்புரம் மாவட்டம் தைலாபுரம் தோட்டத்தில் பாமக ஒழுங்கு நடவடிக்கைக்குழு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ராமதாஸ், குற்றச்சாட்டுகள் குறித்து விளக்கம் அளிக்க அன்புமணிக்கு நோட்டீஸ் அனுப்பியதாக தெரிவித்தார்.