ஓரணியில் தமிழ்நாடு முன்னெடுப்பு குறித்த ஆலோசனைகளை வழங்கி உற்சாகம் பெற்றதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்த காணொளியுடன் அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், கட்சியினர் களத்தில் ஓய்வின்றி களமாடிக் கொண்டிருக்கும்போது, மருத்துவர்கள் வற்புறுத்தினாலும் தமக்கு மருத்துவமனையில் ஓய்வெடுக்க மனமில்லை என தெரிவித்துள்ளார். மேலும், உயிராக நம்மை இயக்கும் கட்சியின் களச் செயல்பாடுகள் குறித்து மண்டல பொறுப்பாளர்களிடம் ஆலோசித்தபோது, உறுப்பினர்கள் சேர்க்கையில் 150 தொகுதிகளில் நமது இலக்கை எட்டிய இன்பச் செய்தியை அவர்கள் பகிர்ந்ததை கேட்டு உற்சாம் அடைந்ததாக தெரிவித்துள்ளார்.