ஹெல்மெட் அணியாமல் பைக்கில் சாகசம் செய்தபடி தம்மை பின்தொடர்வதைப் பார்க்கும்போது பதற்றமாக இருப்பதாகவும், அதனை தவிர்க்க வேண்டும் எனவும், தவெக தொண்டர்களுக்கு அக்கட்சியின் தலைவர் அறிவுரை வழங்கினார். கட்சி தொடங்கிய பின் சென்னை விமான நிலையத்தில் முதல் முறையாக செய்தியாளர்களை சந்தித்து பேசிய விஜய், கொடைக்கானலுக்கு படப்பிடிப்பிற்கு செல்லும் தம்மை யாரும் பின்தொடர வேண்டாம் என கேட்டுக் கொண்டார்.