திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் வெகு விமர்சையாக நடைபெற்ற குடமுழுக்கு விழாவில் 6 ஆயிரம் பக்தர்களுக்கு திருப்பரங்குன்றம் எம்.எல்.ஏ அன்னதானமும், பிரசாதப்பையும் வழங்கினார். அதிகாலையே நடைபெற்ற குடமுழுக்கு விழாவிற்கு திரளான பக்தர்கள் வருகை தந்த நிலையில் அதிமுக எம்.எல்.ஏ-வும், மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளருமான ராஜன் செல்லப்பா குடும்பத்தினருடன் வருகை தந்து, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கியதோடு பக்தர்களுடன் பக்தர்களாக அமர்ந்து உணவு அருந்தினர்.