சென்னை, ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. கிளை பாக முகவர்களின் செயல்பாடுகளை விரைவுபடுத்துவது மற்றும் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப் பணிகளை கண்காணிப்பது குறித்து ஆலோசனை நடைபெற்றதாக கூறப்படுகிறது. ஒரு சில மாவட்ட செயலாளர்கள் சரியான ஒத்துழைப்பு வழங்குவதில்லை என்று, தகவல் தொழில்நுட்ப அணி நிர்வாகிகள் புகார் தெரிவித்த நிலையில், புகாருக்குள்ளான மாவட்ட செயலாளர்களிடம் எடப்பாடி பழனிசாமி, ஒன் டூ ஒன் ஆலோசனை நடத்தியதாகவும் கூறப்படுகிறது.இதையும் பாருங்கள் - சட்டமன்ற தேர்தல் - தீவிரம் காட்டும் இபிஎஸ் | Edappadi Palaniswami Election Strategy