திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி அருகே தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியை எற்ற போலீஸார் அனுமதி மறுத்ததால் வாக்குவாதம் ஏற்பட்டது. காட்டுப்பாக்கம் பகுதியில் தவெக நிர்வாகிகள் தங்களது சொந்த இடத்தில் புதிதாக கொடிக்கம்பம் நட்டு, அதில் கட்சி கொடியேற்றி நலத்திட்ட உதவிகள் வழங்க முடிவு செய்திருந்தனர். ஆனால், உரிய அனுமதி இல்லாமல் கொடியேற்றக் கூடாது என போலீஸார் தடுத்து நிறுத்தினர்.