மாற்றுத்திறனாளிகளை அவமதித்ததாக கைது செய்யப்பட்ட மகாவிஷ்ணுவின் ஜாமீன் மனுவிற்கு காவல்துறை பதிலளிக்க சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சென்னை சைதாப்பேட்டை அரசு பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில் மாற்றுத்திறனாளிகளை அவதிக்கும் வகையில் பேசியதாக பரம்பொருள் அறக்கட்டளை நிறுவனர் மகாவிஷ்ணு கைது செய்யப்பட்டார்.இந்நிலையில், ஜாமீன் கோரி மகாவிஷ்ணு தாக்கல் செய்த மனுவை விசாரித்த கூடுதல் நீதிபதி ஜெ.சந்திரன், காவல்துறை பதிலளிக்க அவகாசம் கேட்டதையடுத்து, விசாரணையை அக்டோபர் 3 ஆம் தேதி ஒத்திவைத்து உத்தரவிட்டார்.