சாத்தான்குளம் தந்தை- மகன் கொலை வழக்கு தீர்ப்புக்காக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.தந்தை- மகன் கொலை வழக்கில் அரசு தரப்பு சாட்சியாக உள்ள தூத்துக்குடி நடுவர் நீதிமன்ற மாஜிஸ்திரேட் சக்திவேலிடம் குறுக்கு விசாரணை நடத்த அனுமதிக்க கோரி, சிறையில் அடைக்கப்பட்டுள்ள காவலர் ரகு கணேஷ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் விசாரணைக்கு வந்தது. அப்போது சம்பந்தப்பட்ட மாஜிஸ்திரேட் 100 பக்கங்கள் கொண்ட சாட்சியத்தை திறந்த நீதிமன்றத்தில் அளித்துள்ள நிலையில் தற்போது குறுக்கு விசாரணை கோருவது வழக்கை இழுத்தடிக்கும் செயல் என கண்டித்த நீதிபதி வழக்கு தீர்ப்புக்காக ஒத்திவைக்கப்படுவதாக உத்தரவிட்டார்.