ஆடிக் கிருத்திகையை ஒட்டி, சிறுவாபுரி முருகன் கோவிலில் திரளான பக்தர்கள் பால்குடம் எடுத்தும், மயில் மற்றும் புஷ்ப காவடி எடுத்தும் நேர்த்திக்கடன் செலுத்தினர். திருவள்ளூர் மாவட்டம் சிறுவாபுரியில் உள்ள பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில், பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் இருந்து ஏராளமான பெண்கள் தலையில் பால்குடம் சுமந்து சென்று கோவிலை அடைந்தனர். அதேபோல, திரளான ஆண்கள் மயில் மற்றும் புஷ்ப காவடிகளை சுமந்து சென்றனர். தொடர்ந்து, பக்தர்கள் சுமந்து சென்ற பால், உற்சவர் முருகனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது.