கடலூர் மாவட்டம் வடலூர் சத்திய ஞானசபையில், ஆடி மாத சிறப்பு ஜோதி தரிசனத்தை திரளான பக்தர்கள் கண்டுகளித்தனர். இரவு 7.40 மணியளவில் 6 திரைகளையும் நீக்கி ஜோதி காண்பிக்கப்பட்டபோது, அங்கு கூடியிருந்த பக்தர்கள் அருட்பெருங்ஜோதி, தனிப்பெருங்கருணை என பக்தி முழக்கமிட்டு ஜோதியை தரிசனம் செய்தனர்.