உதகையில் விநாயகர் கோவில் விழாவில் ஆதி திராவிட பெண்ணை சாதி ரீதியாக இழிவுபடுத்திய புகாரில் போலீசார் மூன்று பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். பிஷப் டவுன் பகுதியில் உள்ள வனத்துறைக்கு சொந்தமான விநாயகர் கோவிலில் கடந்த 2023ஆம் ஆண்டு ஆதிதிராவிட சமூகத்தை சேர்ந்த சகுந்தலா, அபிஷேகத்திற்காக புனித நீரை தலையில் சுமந்து கொண்டு கோவிலுக்குள் செல்ல முற்பட்டபோது சுப்பிரமணி, அந்தோனி, முரளி ஆகியோர் சாதி ரீதியாக இழிவுபடுத்தியது மட்டுமல்லாமல் அதனை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டதாக தெரிகிறது. இந்நிலையில், சகுந்தலா டி1 காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் நடவடிக்கை மேற்கொண்டனர்.