தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் இந்த மாதம் முதல் கூடுதலாக கோதுமை வழங்கப்படும் என அமைச்சர் சக்கரபாணி தெரிவித்தார். திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர், 15 நாட்களில் 17 லட்சம் பேருக்கு புதிதாக ரேஷன் அட்டைகள் வழக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும், 28 ஆயிரம் ரேஷன் கடைகளில், கண் கருவிழி பதிவு மூலம் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டு வருவதாக கூறினார்.