தீபாவளி தொடர் விடுமுறை முடிந்து 4ம் தேதி சென்னை திரும்பும் பொதுமக்களின் வசதிக்காக சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி திங்கட்கிழமை அதிகாலை 4 மணி முதல் 6 வரை காட்டாங்குளத்தூர் முதல் தாம்பரம் ரயில் நிலையம் வரை கூடுதல் மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றன.