சென்னை மதுரவாயலில் நடிகை சோனா ஏடன் வீட்டின் சுவர் ஏறி குதித்து திருட முயன்ற இருவர்,அவரிடம் கத்தியை காட்டி மிரட்டி தப்பி சென்றனர். மதுரவாயல் கிருஷ்ணா நகர் 3வது பிரதான சாலையில் நடிகை சோனா ஏடன் கடந்த 6 மாதங்களாக வசித்து வருகிறார்.இந்நிலையில் மர்மநபர்கள் இருவர் வீட்டின் மதில் சுவர் ஏறி குதித்து, ஏசி அவுட்டோர் யூனிட்டை திருட முயன்றபோது அவரது வளர்ப்பு நாய் சத்தம் கேட்டு நடிகை சோனா வெளியே வந்துள்ளார். அப்போது திருடர்கள் கத்தியை காட்டி சோனாவை மிரட்டி அங்கிருந்து தப்பி சென்றதாகவும் அவர் கூச்சலிட்டபோது அப்பகுதிவாசிகள் ஒருவர் கூட உதவ முன்வரவில்லை எனவும் சோனா கூறியுள்ளார்.