தமிழ் நடிகைகள் குறித்து இழிவாக பேசியதாக கூறி டாக்டர் காந்தராஜ் மீது நடவடிக்கை எடுக்ககோரி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் நடிகை ரோகிணி புகார் அளித்துள்ளார். யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், நடிகைகளை ஒட்டு மொத்தமாக கீழ்த்தரமாக பேசியதோடு, அனைத்து நடிகைகளும் பாலியல் தொழிலாளி என்பது போல டாக்டர் காந்தராஜ் பேசியிருப்பது கண்டிக்கத்தக்கது என ரோகிணி குறிப்பிட்டுள்ளார். எவ்வித அடிப்படை ஆதாரமும் இன்றி டாக்டர் காந்தராஜ் இழிவாக பேசியதாகவும் அவர் மீது குற்ற வழக்கு பதிவு செய்து சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும், யூடியூப் சேனலில் பதிவேற்றப்பட்ட பேட்டியை உடனடியாக நீக்க வேண்டும் எனவும் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் விசாகா கமிட்டி குழு தலைவரான நடிகை ரோகிணி வலியுறித்தியுள்ளார்.