சேலம் மாவட்டம் மல்லூர் அருகே வேங்காம்பட்டி கிராமத்தில் கோவில் திருவிழாவின் நிறைவாக நடத்தப்பட்ட கலை நிகழ்ச்சியில் நடிகை ரம்யா நம்பீசன் கலந்து கொண்டார். நடன கலைஞர்கள், சிறுமிகளுடன் சேர்ந்து சினிமா பாடல்களுக்கு நடனமாடிய ரம்யா நம்பீசன், பாடல் பாடியும் அசத்தினார்.