அதிமுகவில் நடிகை கவுதமிக்கு கொள்கை பரப்பு துணைச் செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது. பாஜகவில் மாநில பொறுப்பில் இருந்த நடிகை கவுதமி, அக்கட்சியில் இருந்து விலகி, எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார். இந்த நிலையில், கட்சியில் அங்கீகாரம் அளிக்கும் வகையில், நடிகை கவுதமிக்கு அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது. அதேபோல, பாஜகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்த தடா பெரியசாமி, அனைத்துலக எம்ஜிஆர் மன்ற துணைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அதிமுக சிறுபான்மையினர் நலப் பிரிவு துணைச் செயலாளராக ஃபாத்திமா அலியும், கட்சியின் விவசாயப் பிரிவு துணைச் செயலாளராக P.சன்னியாசியும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.