தேனியில் நகை கடை திறப்பு விழாவில் பங்கேற்ற நடிகை அபர்ணா பாலமுரளி குத்து விளக்கேற்றி கடையை திறந்துவைத்தார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அபர்ணா, தமிழில் தற்போது எந்த படத்திலும் நடிக்கவில்லை எனவும், பேச்சு வார்த்தை நடைபெற்று வருவதாகவும் கூறினார். தொடர்ந்து ஹேமா கமிட்டி குறித்த செய்தியாளர் கேள்வி அதை பற்றியெல்லாம் என்னிடம் கேட்காதீர்கள், அதெல்லாம் எனக்கு தெரியாது தெரியாது என கூறியவாறே அந்த இடத்தில் இருந்து சென்றார்.