சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள கீழடி அருங்காட்சியகத்தை நடிகர் வடிவேலு நேரில் பார்வையிட்டு ரசித்தார். நடிகர் வடிவேலுவை வரவேற்ற அதிகாரிகள், அவருக்கு கீழடி பற்றிய புத்தகத்தை பரிசாக வழங்கி, அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள பொருட்கள் குறித்து விளக்கமளித்தனர். பின்னர், வடிவேலுவுடன் அருங்காட்சியக பணியாளர்களும், சுற்றுலா பயணிகளும் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.