நடிகர் சிங்கமுத்துவுக்கு எதிராக வடிவேலு தொடர்ந்த வழக்கு, உயர்நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. யூடியூப் சேனல்களில் தன்னைப் பற்றி அவதூறு பரப்பியதற்காக 5 கோடி ரூபாய் மான நஷ்டஈடு வழங்க நடிகர் சிங்கமுத்துவுக்கு உத்தரவிட கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் நடிகர் வடிவேலு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு மாஸ்டர் நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்யப்பட்டிருந்த நிலையில், மாஸ்டர் நீதிமன்றத்தில் ஆஜராகி நடிகர் வடிவேலு சாட்சியம் அளித்தார். இந்நிலையில், சிங்கமுத்து தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், வடிவேலிடம் குறுக்கு விசாரணை நடத்த அனுமதிக்குமாறு கேட்டுக் கொண்டார். இதனையடுத்து இந்த வழக்கு தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் முறையிட்டு கொள்ளுமாறு இரு தரப்பினருக்கும் மாஸ்டர் நீதிமன்றம் அறிவுறுத்தியது.