ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரில் உள்ள பிரசித்தி பெற்ற லட்சுமி நரசிம்மர் கோவிலில், நடிகர் சூர்யா சாமி தரிசனம் செய்தார். நடிகர் சூர்யா நடித்துள்ள கங்குவா திரைப்படம் கடந்த 14ம் தேதி திரையரங்களில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் விமர்சனங்களுக்கு உள்ளானது. இந்நிலையில் சூர்யாவும் இயக்குனர் சிவாவும் சோளிங்கரில் உள்ள லட்சுமி நரசிம்மர் சுவாமி கோயிலுக்கு சாமி தரிசனம் செய்யச் சென்றனர். மலையடிவாரத்தில் இருந்து ரோப்காரில் மலைக் கோயிலுக்கு சென்ற அவர்கள், அமிர்தவல்லி தாயார் மற்றும் யோக நரசிம்மரை தரிசனம் செய்தனர். அப்போது கோவில் சார்பில் இருவருக்கும் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.