போதைப் பொருள் பயன்பாடு விவகாரம் தொடர்பான சென்னை நுங்கம்பாக்கம் போலீசார் நடிகர் ஸ்ரீகாந்திடம் விசாரணை நடத்தி வருகின்றனர். நுங்கம்பாக்கத்தில் உள்ள பார் ஒன்றில் ஏற்பட்ட தகராறு தொடர்பாக கைது செய்யப்பட்ட அதிமுக முன்னாள் பிரமுகர் பிரசாத்,நடிகர் ஸ்ரீகாந்துக்கு கோகைன் சப்ளை செய்ததாக போதைப் பொருள் விற்பனை செய்த பிரதீப் என்பவர் வாக்குமூலம் அளித்ததாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து ஸ்ரீகாந்த் போதைப் பொருள் பயன்படுத்தினாரா என்பதை கண்டறிய அவருக்கு ரத்த பரிசோதனை செய்யப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதையும் படியுங்கள் : மலைசரிவிலிருந்து உருண்டு விழுந்த பாறைகள்..