சிவகங்கை மாவட்டம் கீழடியில் உள்ள அருங்காட்சியகத்தை நடிகர் சிவகார்த்திகேயன் குடும்பத்துடன் சென்று பார்வையிட்ட நிலையில், பார்வையாளர்கள் பலரும் அவருடன் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர். 2 ஆயிரத்து 600 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மக்கள் பயன்படுத்திய மண்பாண்ட பொருட்கள், அணிகலன்கள், இரும்பு ஆயுதங்கள், விளையாட்டு காய்கள் உள்ளிட்ட 13 ஆயிரத்து 484 பொருட்கள் கீழடி அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இந்த சூழலில், நடிகர் சிவகார்த்திகேயன், தனது மனைவி மற்றும் மகள் ஆகியோருடன் கீழடிக்கு சென்று அருங்காட்சியகத்தை பார்வையிட்டார். அப்போது, பண்டைய கால மக்கள் பயன்படுத்திய விலங்கின் புடைப்பு சிற்பம் முன்பு குடும்பத்துடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.