தேனி மாவட்டம் கருவேல் நாயக்கன்பட்டியில் உள்ள அரசு கள்ளர் பள்ளியில் நன்கொடை வழங்கியவர்களுக்கான விருது வழங்கும் விழாவில் நடிகர் சசிக்குமார் கலந்து கொண்டு விருதுகளை வழங்கி சிறப்பித்தார். மேலும் அரசு பள்ளிகளை ஊக்குவிக்க நன்கொடையாளர்கள் அதிக அளவில் முன்வரவேண்டும் என கேட்டுக்கொண்டார்.