ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே நடைபெற்ற ஜப்பான் ஹிட்டோ ராய் கராத்தே போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு, நடிகர் பிரசாந்த் பரிசுக் கோப்பைகளையும், சான்றிதழ்களையும் வழங்கினார். முன்னதாக அமைச்சர் காந்தி குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்த இப்போட்டியில், நடிகர் பிரசாந்தும் மாஸ்டரும் கராத்தே சண்டையில் ஈடுபட்டனர்.