போதைப்பொருள் வழக்கில் கைதான நடிகர் கிருஷ்ணா மற்றும் கெவின் சிறையில் அடைக்கப்பட்டனர். ஜூலை 10-ஆம் தேதி வரை சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. கொகைன் போதைப் பொருள் பயன்படுத்திய விவகாரத்தில் நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து, கிருஷ்ணாவும், கெவினும் கைது செய்யப்பட்டனர். நடிகர் ஸ்ரீகாந்த்துடன் சேர்ந்து போதைப் பொருட்கள் வாங்கி பயன்படுத்தி, நண்பர்களுக்கும் அளித்ததாக நடிகர் ஸ்ரீகிருஷ்ணாவும், போதைப் பொருட்கள் வாங்கி பயன்படுத்தி, விற்பனை செய்ததாக ஜெஸ்வீர் (எ) கெவினும் கைது செய்யப்பட்டு உள்ளதாக போலீஸார் தெரிவித்தனர். நடிகர் கிருஷ்ணாவை போலீஸார் அழைத்துச் சென்றபோது, அவரது உதவியாளர் பிரபாகர் தடுத்து இடையூறு செய்த நிலையில், அவரை போலீஸார் அப்புறப்படுத்தினர்.இதையும் படியுங்கள் : ஓட்டப்பிடாரம் அருகே அதிமுக பிரமுகர் கொலை.. எடப்பாடி பழனிசாமி அரசியல் ஆதாயம் தேட முயற்சி