கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் அருகே, நடிகர் ஜீவா சென்ற கார் விபத்துக்குள்ளானது. ஜீவா தனது மனைவி மற்றும் குடும்பத்தினருடன் சேலத்தில் இருந்து சென்னைக்கு காரில் வந்த போது, கனியாமூர் புறவழிச்சாலையில் திடீரென குறுக்கே பைக் வந்தது. அதன் மீது மோதாமல் இருக்க நடிகர் ஜீவா காரை திருப்பியபோது, சாலை தடுப்பில் மோதி கார் விபத்துக்குள்ளானது. இதில் ஜீவா மற்றும் அவருடைய குடும்பத்தினர் லேசான காயத்தோடு உயிர் தப்பினர். இந்த நிலையில், நடிகர் ஜீவாவை டென்ஷன்படுத்திய ரசிகரிடம், அவர் கோபத்தில் ஆபாசமாக திட்டிய வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.