தனது கார் விபத்திற்கு காரணமான பைக் ஓட்டுநர் மீது நடவடிக்கை எடுக்க கோரி நடிகர் ஜீவா கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.நடிகர் ஜீவா தனது பெண் மேலாளருடன் சென்னையில் இருந்து சேலம் நோக்கி காரில் சென்றார்.அப்போது, அமையாகரம் பேருந்து நிலையம் அருகே மணிகண்டன் என்பவர் பைக்கில் சாலையை கடக்க முயன்றதாக கூறப்படுகிறது.இதனை அறிந்த ஜீவா பைக் மீது மோதாமல் இருக்க காரை திருப்பியபோது, சாலையில் உள்ள தடுப்பு சுவர் மீது கார் மோதி விபத்துக்குள்ளானதாக தெரிகிறது.இதில், காரின் முன்பக்கம் பலமாக சேதம் அடைந்த நிலையில், ஜீவாவும், அவரது பெண் மேலாளரும் சிறு காயத்துடன் உயிர் தப்பினர்.