நடிகர் கவுண்டமணியின் மனைவி சாந்தி உடல் நலக்குறைவு காரணமாக சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார். கடந்த சில ஆண்டுகளாகவே உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த சாந்தியின் உடல், கவுண்டமணியின் இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. நண்பர்கள், உறவினர்கள், திரையுலகத்தினர் என பலரும் கவுண்டமணியின் மனைவியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.