தூத்துக்குடி, தாளமுத்து நகர்... ஓட்டுநர் வீட்டில் நகைகளை திருடிச் சென்ற இளைஞர். இளைஞர் மீதும், அவரது தந்தையான திமுக நிர்வாகி மீதும் கொலை வெறியில் இருந்த ஓட்டுநர். நண்பருடன் சேர்ந்து திமுக நிர்வாகியை அரிவாளால் வெட்டிக்கொன்றுவிட்டு தப்பிஓட்டம். கிட்டத்தட்ட 10 வருடங்களுக்கு பின் வெளியான தீர்ப்பு. கொலையாளிகளுக்கு வழங்கப்பட்ட தண்டனை என்ன?தாளமுத்து நகர் ரோட்ல சேசு ராஜா-ங்குற நபரு நடந்து போய்ட்டு இருந்தாரு. அப்ப அவர வழிமறிச்ச ரெண்டு பேரு, மறைச்சு வச்சுருந்த அரிவாள எடுத்து சேசு ராஜாவ வெட்டிக் கொன்னுட்டு அங்கருந்த தப்பிச்சு போய்ட்டாங்க. சேசுராஜா உயிரிழந்த சம்பவம், தாளமுத்து நகர் ஃபுல்லா காட்டுத் தீ போல பரவிருக்கு. இதனால கிராம மக்கள் எல்லாரும் சேசுராஜா உயிரிழந்து கிடந்த இடத்துல கூடியிருக்காங்க.இந்த விஷயத்த கேள்விப்பட்டு, ஸ்பாட்டுக்கு வந்த போலீஸ் சடலத்த மீட்டு போஸ்ட் மார்டத்துக்கு அனுப்பி வச்சாங்க. அடுத்து சேசு ராஜாவோட சொந்தக்காரங்க கிட்ட போலீஸ் விசாரணை பண்ணிருக்காங்க. சேசு ராஜாவுக்கு யார் கூடயாவது முன்பகை இருக்கா, உங்களுக்கு யார் மேலையாவது சந்தேகம் இருக்கான்னு போலீஸ் கேட்ருக்காங்க.அப்ப இதே கிராமத்த சேந்த, மாரி செல்வத்தக்கும் எங்க குடும்பத்துக்கும் பிரச்னை இருந்துச்சு, அவன் தான் இந்த கொலை சம்பவத்துல ஈடுபட்டுருப்பான்னு சந்தேகமா சொல்லிருக்காங்க.இந்த வாக்குமூலத்த வச்சு, தலைமறைவா இருந்த மாரி செல்வத்தையும், அவரு கூட இருந்த அருண் சிங்கையும் பிடிச்ச போலீஸ், ரெண்டு பேரையும் தங்களோட கஸ்டடியில எடுத்து விசாரிச்சாங்க. தூத்துக்குடி தாளமுத்து நகர் பகுதிய சேந்த சேசு ராஜா, மாப்பிளை யூரணி ஊராட்சி ஒன்றிய திமுக செயலாளரா இருந்தாரு. ரியல் எஸ்டேட் வேலையும் செஞ்சுட்டு இருந்தாரு. இவருக்கு அலெக்ஸ்-ங்குற மகன் இருக்காரு.இதுக்கிடையில, டேவிஸ் புரம் பகுதியைச் சேர்ந்த மாரி செல்வத்தோட வீட்ல தங்க நகை, திருட்டு போய்ருக்கு. இதுதொடர்பா மாரிச்செல்வம் தாளமுத்து நகர் போலீஸ் ஸ்டேஷன்ல புகார் அளிச்சுட்டாரு. இந்த புகார வாங்குன போலீஸ், திருடன பத்தி விசாரிக்க ஆரம்பிச்சாங்க. அதுல சேசு ராஜாவோட மகன் அலெக்ஸ் தான் இந்த திருட்டுல ஈடுபட்டதுன்னு தெரியவந்துருக்கு.இதனால அலெக்ஸ்ஸ கைது பண்ணி விசாரணையில இறங்குனாங்க போலீஸ். அதுக்கடுத்து திருடுபோன தங்க நகையையும், வெள்ளிக் கொலுசையும் மீட்ட போலீஸ் அவர சிறையில அடைச்சுட்டாங்க. ஆனா அலெக்ஸ் கைது செய்யப்பட்ட விஷயம் மாரிச்செல்வத்துக்கு தெரியல. இதனால ஆர்வக்கோளாறான மாரிச்செல்வம் நடந்த எல்லாத்தையும் தன்னோட நண்பர் அருண் சிங் கிட்ட சொல்லி, அலெக்சையும் அவரோட தந்தை சேசுராஜாவையும் ஏதாவது பண்ணனும்னு திட்டம் போட்ருக்காரு. சம்பவத்தன்னைக்கு சேசுராஜா தாளமுத்து நகர்ல உள்ள சாலையில நடந்து போய்ட்டு இருந்தாரு. அப்ப அவர வழிமறிச்ச மாரிச்செல்வமும், அருண் சிங்கும் அவரு கிட்ட வாக்குவாதம் பண்ணிருக்காங்க.உன் மகன் தான், எங்க வீட்ல வந்து திருடிட்டு போனான், அதனால திருடு போன நகைகள் திருப்பி கொடுன்னு கேட்ருக்காரு. அதுக்கு சேசுராஜா நானா உன் வீட்ல வந்து திருடுனேன், உனக்கு தேவைனா என்னோட மகன் கிட்டப் போய் கேட்டுக்கோன்னு சொல்லிருக்காரு. இதனால ரெண்டு தரப்புக்கு இடையில பயங்கர சண்டை ஏற்பட்டிருக்கு.சேசுராஜா, மாரிசெல்வத்த தகாத வார்த்தையால திட்டிருக்காரு. இதனால அந்த ரெண்டு பேரும் சேசு ராஜாவ போட்டு சரமாரியா அடிச்சுருக்காங்க. அடுத்து மறைச்சு வச்சுருந்த அரிவாள எடுத்து சேசுராஜாவ சரமாரியா வெட்டிட்டு தப்பிச்சு போய்ட்டாங்க. சேசுராஜாவ வெட்டுறத பாத்த அங்கருந்த பொதுமக்கள் அவங்கள தடுக்க வந்துருக்காங்க.ஆனா அந்த ரெண்டு பேரும் பொதுமக்களையும் அரிவாள காட்டி மிரட்டிருக்காங்க. அதுக்கப்புறம் சேசுராஜா கொலை வழக்குல மாரிச்செல்வத்தையும், அருண் சிங்கையும் போலீஸ் அரெஸ்ட் பண்ணிட்டாங்க.இந்த வழக்கு தூத்துக்குடி மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்துல நடந்துட்டு இருந்துச்சு. கிட்டத்தட்ட 10 வருஷம் கழிச்சு தீர்ப்பு வெளியாகிருக்கு. அதுல மாரிசெல்வத்தையும், அருண் சிங்கையும் குற்றவாளின்னு உறுதி செஞ்ச நீதிமன்றம் அவங்களுக்கு ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளிச்சுட்டாங்க.