கும்பகோணம் மாநகராட்சி மீன் மார்க்கெட்டில் அதிரடி ஆய்வு மேற்கொண்ட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் கெட்டுப்போன 150 கிலோ மீன்களை பறிமுதல் செய்து பினாயில் ஊற்றி அழித்தனர். கெட்டுப்போன மீன்கள் விற்பனை செய்யப்படுவதாக எழுந்த புகாரின் அடிப்படையில் அதிகாரிகள் அதிரடி ஆய்வு மேற்கொண்டனர்.