நீர்வழிப் பகுதிகளில் வசிப்பவர்கள் வேறு இடத்தில் குடியிருக்க இடம் கேட்டு மனு அளித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார். கிருஷ்ணகிரியில் நடந்த ஆய்வு கூட்டத்தில் பேசிய அவர், மழை வெள்ளத்தால் ஆதார் கார்டு, குடும்ப அட்டை மற்றும் சான்றிதழ்களை இழந்தவர்களுக்கு சிறப்பு முகாம்கள் நடத்தப்படும் என தெரிவித்தார்.