வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் தவணைத் தொகையை செலுத்தாததால் லாக்கை உடைத்து ஸ்கூட்டரை தனியார் நிதி நிறுவன ஊழியர் எடுத்து சென்ற வீடியோ வெளியாகியுள்ளது. சத்யா என்பவர் ஸ்ரீராம் என்ற தனியார் பைனான்ஸில் கடன் பெற்று ஸ்கூட்டர் வாங்கினார்.அவர் கடனை செலுத்தாத நிலையில் நிதி நிறுவன ஊழியர்கள் பல முறை தொடர்புக்கொண்டும் பதிலளிக்கவில்லை என கூறப்படுகிறது.