சட்டவிரோதமாக சாலையில் கொடிக் கம்பம் வைத்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நடைபாதையில் சட்டவிரோதமாக வைக்கப்படும் கட்சிக் கொடிக் கம்பங்களை அகற்றக்கோரி சென்னை திருவல்லிக்கேணியை சேர்ந்த ஷ்யாம் குமார் என்பவர் தொடர்ந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. மனுவில், சட்டவிரோத கொடிக் கம்பங்கள் தொடர்பாக ஏற்கனவே சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகள் முறையாக பின்பற்றப்படுவதில்லை என குற்றம்சாட்டப்பட்டிருந்தது.